தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். நாமக்கல், கரூர் ஆகிய 2 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.