முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

84 நாடுகளுக்கு 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நாட்டில் சமீப நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனால், அவற்றை கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தலைமையில் 24-வது உயர்மட்ட குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், நாட்டில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 1,19,13,292 பேர் குணமடைந்து உள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் குணமடைந்தோர் விகிதம் 96-97 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.  ஆனால், இந்த விகிதம் 91.22 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.  எனினும், கடந்த 7 நாட்களாக 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என கூறினார். 

கடந்த 14 நாட்களாக 8 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 3 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என்றும் கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும்  ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். 

இதுவரை 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.  அவற்றில் 1.05 கோடி தடுப்பூசி டோஸ்கள் 44 நாடுகளுக்கு மானிய அடிப்படையிலும், 3.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் 25 நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையிலும் மற்றும் 1.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் 39 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் வசதியின் அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து