முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீத வாக்குப்பதிவு: சத்யபிரத சாகு தகவல்

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழக பேரவைத் தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் புதிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் 2.31 கோடி பெண் வாக்காளர்கள் என்றும், 2.26 கோடி ஆண் வாக்காளர்கள், 1,419 மூன்றாம் பாலினத்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 7-ம் தேதி தெரிவித்திருந்தாா். மேலும், மாவட்ட வாரியாகவும் வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அவா் வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், புதிய வாக்குப்பதிவு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக எத்தனைப் பேர் வாக்களித்தனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து