முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் தாயாருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷான் நசீரை, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 15-ம் தேதி வருமாறு அமலாக்கப்பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மனைவி குல்ஷான் நசீர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மெகபூபா முப்தி, அவரின் தாயாருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மன் என்பது அரசியல் பழிவாங்கல். காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மெகபூபா முப்தியின் குரலை நசுக்குவதற்கான முயற்சி. ஆனால், அதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் எனத் தெரிவி்த்தார்.

சமீபத்தில் மெகபூபா முப்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கப்பிரிவு நடத்திய சோதனையில் இரு டைரிகள் கிடைத்தன. அந்த டைரியில் குறிப்பிட்டுள்ள விவரங்களில் மெகபூபா முப்திக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.  இந்த பணம் அனைத்தும் முதல்வராக மெகபூபா இருந்த காலத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதில் சில லட்சம் ரூபாய்கள், மெகபூபா முப்தியின் தாயார், குல்ஷான் நசீர் வங்கிக்கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து