முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்: புதுவை கவர்னர் தமிழிசை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓட்டல் சங்கத்தினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

100 சதவீதம்  கொரோனாவை கட்டுப்படுத்த நூறு இடங்களில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணி வரும் 11 முதல் 14 வரை புதுச்சேரியில் நடக்கும்.  புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் இன்று முதல் விதிக்கப்படும்.  முகக்கவசம் அணியாவிட்டால் கடைகளில், மால்களில் அனுமதிக்கக் கூடாது. 

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  அனைத்து நிகழ்வுகளிலும் இருக்கைகளில் 50 சதவீதத்தினரை மட்டும் அனுமதிக்கவேண்டும்.  திருக்கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். 

இரவு 12 முதல் காலை 5 வரை கொரோனா கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருக்கும்.  பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை. ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து