முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும் - பிரியங்கா பேச்சு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கி ஜூன் 15-ந் தேதி வரையிலும் நடக்க உள்ளன.

நேரடியாக வகுப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அதிகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று 1 1/2 லட்சம் மாணவர்கள் கையெழுத்திட்டு தேர்வு துறைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா மோசமாக பரவிவரும் இந்த சூழ்நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை நேரடியாக நடத்துவது பொறுப்பற்ற செயல்.

இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.நோய் தொற்று அச்சுறுத்தும் இந்த நேரத்தில் மாணவர்களை நேரடியாக வகுப்புகளுக்கு வரவழைத்து தேர்வுகளை நடத்த செய்வது கவலை அளிக்கும் வி‌ஷயம். எனவே ஆன்லைன் மூலமாக இந்த தேர்வை நடத்தலாம். அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து