முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி போட்டால் உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. அதே சமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10 சதவீதம் விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மக்கள் கொரோனா தடுப்பூசி போட அச்சம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க மண்டலம் வாரியாக இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து