முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14-ம் தேதி முதல் 16 வரை தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 8-ம் தேதி வரை 4,58,969 சுகாதாரப் பணியாளர்கள், 5,61,531 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 9,21,050 நபர்கள், 45- 59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 70,216 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 11,14,270 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி 2,12,517 சுகாதாரப் பணியாளர்கள், 81,685 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 25,804 நபர்கள் 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 100 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40,894 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதுவரை 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒரு காலவரையறைக்குள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 சத்வீத  தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக வரும் 14-ம் தேதி முதல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து