முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரமாகும் கொரோனா தொற்று பரவல்: இந்த வருடமும் மதுரை சித்திரை திருவிழா : கோவிலின் உள்திருவிழாவாக நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தீவிரமாகும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போன்று மதுரை சித்திரை திருவிழா கோவிலின் உள்திருவிழாவாகவே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 

“கோவில் திருவிழாக்கள் பொதுமக்கள் பாதுகாப்பு நலன்கருதி மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை போன்று சித்திரை திருவிழா கோவிலின் உள்திருவிழாவாகவே நடைபெறும்” என்று கூறினார். முன்னதாக, மதுரை மாவட்டத்தில் தற்போது மிக வேகமாக கொரோனா நோய் தொற்று பரவி வருவதையடுத்து ஆட்சியர் அன்பழகன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், காய்கறி வணிக வளாகம் நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்டவர்கள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், காய்கறி வணிக வளாகம் நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனிநபர்கள் காய்கறி சந்தைகளில் பொருட்களை வாங்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் கபசூர குடிநீர் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டைவிட தற்போது வேகமெடுத்து உள்ளது. 21 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளது, தெருவில் மூண்று பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் தெரு அடைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தன்னார்வளர்கள் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்” என்றார்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்று பாதிப்பின் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகங்களிலேயே திருவிழா வைபவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து