முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 ஆண்டுகளில் முதல் முறையாக எரிபொருள் பயன்பாடு குறைவு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு கடந்த 23 ஆண்டில் முதல் முறையாக 9.1 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் நாட்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது தொடர்பாக, மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 214.12 மில்லியன் டன்கள் பெட்ரோலிய எரிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2020- 2021ம் நடப்பு நிதியாண்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் பயன்பாடு 194.63 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கடந்த 1998-1999 ஆண்டிலிருந்து தற்போதுதான் முதன் முறையாக பெட்ரோல் எரிபொருட்களின் பயன்பாடு 9.1 சதவீதம் குறைந்துள்ளது.

ஊரடங்கின் காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் டீசல் பயன்பாடு அளவு குறைந்த காரணத்தால் மொத்த எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதற்கு காரணமாகும். இந்தியாவில் பெட்ரோலைவிட டீசல் பயன்படுத்துவதே அதிகம். டீசலின் பயன்பாடு 12 சதவீதம் (72.72 மில்லியன் டன்), பெட்ரோல் பயன்பாடு 6.7சதவீதம் (27.95 டன் ஆகும்).

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக, நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7-8 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மற்றும் பெட்ரோல், டீசல் பயன்பாடு மீண்டும் குறையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து