முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாம்பூல தட்டுடன் முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு செய்த நபர்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா தொற்றை தடுக்க, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசம் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.

மேலும், முக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து இலவச முகக்கவசங்களை வழங்கி அணிந்து கொள்ள வலியுறுத்தினார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில், அதனை ஒட்டிய சாலைகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து