முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடந்த 4-ம் கட்ட வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் நேற்று  4-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு விறு விறுப்புடன் தொடங்கியது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. அங்கு 4-வது கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 44 தொகுதிகளுக்கு நேற்று காலை  7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக மாநில போலீசாருடன் இணைந்து 789 கம்பெனி துணை ராணுவத்தினரும் 44 தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக டோலிகஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ முக்கிய வேட்பாளராக கருதப்படுகிறார். இதை போல பா.ஜ.க. எம்.பி.க்கள் லாக்கட் சட்டர்ஜி, நிதிஷ் பிரமாணிக் போட்டியிடும் முறையே சுச்சுரு, தின்கட்டா தொகுதிகளும் முக்கியமான தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இவர்களை தவிர திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோரும் இந்த தேர்தலில் பிரபலங்களாக கருதப்பட்டனர். இந்த தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பிற்பகல் 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து