முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் தோமர்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவல் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக முதியவர்களையும் சிறார்களையும் வீட்டுக்கு திரும்ப அறிவுறுத்துங்கள் என நான் விவசாய சங்க தலைவர்களிடம் பல முறை வலியுறுத்தியுள்ளேன். தற்போது கொரோனாவின் 2-வது அலை துவங்கியுள்ளது. 

விவசாயிகளும் விவசாய சங்கங்களும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். சட்டத்தில் உள்ள சிக்கலான விஷயங்கள் குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாகவும் திருத்தம் செய்யவும் நாங்கள் முன்வந்தோம். 

ஆனால் எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டனர். அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலோ, விவசாய சங்கங்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டாலோ போராட்டம் நீடிக்கலாம். ஆனால் இங்கு எப்படியாயினும் போராட்டத்தை தொடர்வது என விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன என காட்டமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து