முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். 

கொரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் கொரோனா வரைஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. 

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து