முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகராய நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தியாகராய நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ. கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் தியாகராய நகர் தொகுதி வேட்பாளராக ஜெ. கருணாநிதி போட்டியிட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் சகோதரர் ஆவார்.  தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஜெ. கருணாநிதி, லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து ஜெ.கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து