முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் நீக்கம் : இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.,

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ் (எ) பாபு, நெல்லிக்குப்பம் நகரக் கழகச் செயலாளர் சௌந்தர்,  தலைவர் - தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, வீரப்பெருமாநல்லூர் ராம்குமார் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து