முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ஹெலிகாப்டர் விபத்து: மனைவியுடன் உயிர் தப்பினார் இந்தியன் லூலூ குழும தலைவர்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து இந்தியன் லூலூ குழும தலைவர் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர்.

போர்ப்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்திய தகவலின்படி, 480 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் ஐக்கிய அரபு அமீரகவாசிகளில் 2-வது பெரும் பணக்காரராக யூசுப் அலி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

வளைகுடா மற்றும் பல்வேறு நாடுகளில் 200 கிளைகளை கொண்டுள்ள லூலூ சர்வதேச குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குனராக அலி இருந்து வருகிறார்.  இந்தியன் லூலூ குழும தலைவராகவும் இருந்து வரும் இவரது வருவாய் 740 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. 

கேரளாவுக்கு தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் தனது மனைவியுடன் அலி சென்றுள்ளார்.  அலி உள்பட 7 பேர் அதில் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில், கொச்சி நகரில் பனங்காடு பகுதியில் தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த அலி உள்பட 7 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  முதலில் வெளியேறிய விமானி பின்னர் பயணிகளின் கதவை திறந்து விட்டு அவர்களை காப்பாற்றியுள்ளார். 

அவர்கள் அனைவரும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த போது அந்த பகுதியில் கடும் காற்று மற்றும் கனமழை சூழல் காணப்பட்டது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு கேரளாவில் 1,400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஒன்றை கட்டி நன்கொடையாக அலி வழங்கியுள்ளார்.  இதுதவிர 68 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவியும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து