முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? -இன்று முடிவு வெளியாக வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதே போல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது பொதுத்தேர்வில் வேறு ஏதும் மாற்றங்கள் கொண்டு வரலாமா என்பது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுகின்றனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து என்னென்ன முடிவுகள் வெளியாக இருக்கிறது என்று அதிகாரிகள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும் 16-ம் தேதி 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து