முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய் தொற்றின் தாக்கம் குறையாததால் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், நோய் பாதிப்பு சற்று குறைந்த பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு முதலில் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு உள்ளன. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை பொறுத்தவரையில் ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது.

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வை ஆன்லைன் வாயிலாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தியது.

இந்த தேர்வை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள். அவர்களில் இளநிலை, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் ஆன்லைன் மூலம் எழுதிய செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

மாணவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சில கோடு முறைகள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, தேர்வு முடிவில் WH99 என்று இருந்தால் அந்த மாணவருக்கு தேர்வு முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் WH1என்று இருந்தால் அவர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் WH13 என்று இருந்தால் கல்லூரியில் தேர்வு கட்டணம் செலுத்தாதவர் என்பது பொருள் ஆகும். இவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்காது.

அதேபோல் தேர்வு எழுதிய அரியர் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து