முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா எதிரொலி: சரிவில் துவங்கிய மும்பை பங்கு சந்தை

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1470 புள்ளிகள் சரிந்து 48,120 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1லட்சத்து,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1கோடியே,35லட்சத்து,27,717 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்றுக்கு 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1லட்சத்து,70,179 ஆக உயர்ந்துள்ளது. 12.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மகாராஷ்டிரா அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 63,294 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 349 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி மகாராஷ்டிர அரசு இந்த வாரம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

கொரோனா எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1470 புள்ளிகள் சரிந்து 48,120 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 439 புள்ளிகள் சரிந்து, 14,395 என வர்த்தகமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து