முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 100 கோடி மாமூல் புகார்: அனில் தேஷ்முக் இன்று ஆஜராக சி.பி.ஐ. உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : ரூ.100 கோடி மாமூல் உள்ளிட்ட முறைகேடு புகார்களில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு சி.பி.ஐ. உத்தரவிட்டு உள்ளது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் சிக்கிய வெடிகுண்டு கார் வழக்கையடுத்து நடந்த பரபரப்பு திருப்பங்களில் ஒன்றாக மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார்.

வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயும் அனில் தேஷ்முக் மீது சில முறைகேடு புகார்களை கூறினார்.

இதற்கிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அனில் தேஷ்முக் மீதான புகாரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அனில் தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, நேர்முக செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். 

இந்தநிலையில் அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று (புதன்கிழமை) சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து