முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்: திருவில்லிபுத்தூர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

திருவில்லிபுத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கலெக்டர் ரா.கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அனைவரும் தடுப்பு ஊசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பது தொடர்பான ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளைச் சேர்ந்த சுமார் 52 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது அவர்களை மாஸ்க் அணிந்து வரச் சொல்ல வேண்டும். அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகைப் பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 சதவீத கைரேகை பதித்து பொருட்களை வழங்க வேண்டும். மேலும் மூன்று மாதங்கள் கடைக்காரர் குடும்ப உறுப்பினர் கைரேகையைப் பகிர்ந்து பொருட்களை வழங்கினால் அந்தக் கடையைத் தேர்ந்தெடுத்து கடை ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்பன உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் தனி வருவாய் அலுவலர் நாகராஜ் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து