முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்கால் தெற்கு தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காரைக்கால் தெற்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி ஏ.எம்.எச். நாஜிம் தமது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஏ.எம்.எச். நாஜிம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து