முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தில் பா.ஜ.க.வின் ராகுல் சின்ஹாவுக்கு பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்க தேர்தலில் அவதூறாக பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவுக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.  இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.  அதே நேரத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவுக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கூச்பிஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் வாக்குச்சாவடி ஒன்றில் மத்தியப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டு அவர்களது துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

சிட்டால்குச்சியில் குறைந்தது 8 பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாளை  12 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து