முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் ஒரு வாரமாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் டெல்லியில் கூடி ஆலோசித்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளனர். நேற்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3-வது தடுப்பூசி என்ற நிலையை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பெற்றுள்ளது. 

இந்நிலையில், வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா நோய் பரலைக் விரைவாக கட்டுப்படுத்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

உலக சுகாதார மையத்தால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டு தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து