முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 2 முக கவசங்கள் அணிவது பலனளிக்கும் : மருத்துவ நிபுணர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாப்பதற்கு, இரண்டு முக கவசங்கள் அணிவதும் நல்ல பலனளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சிலர் இரண்டு முகக் கவசங்கள் அணிந்து செல்கின்றனர்.  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்கள், சமூக இடைவெளியை பின்பற்றவே முடியாத சூழலில் இரண்டு முகக் கவசம் அணிவது இடைவெளியின்றி இருக்கும் என்பதால் வைரஸ் பரவலை தடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில் இதனை பரிந்துரைக்கின்றனர். அதே சமயம் என் 95 முக கவசம் அணிந்திருந்தால் அது ஒன்றே போதும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து