முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரின் தந்தை மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சங்ககிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரராஜனின் தந்தை மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

சேலம் புறநகர் மாவட்டம் சங்ககிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், சங்ககிரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான எஸ். சுந்தரராஜனின் தந்தை தலைவாசல்காரர்(எ) எஸ். செங்கோட கவுண்டர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். 

பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் சுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து