முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று: இந்தியாவில் ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிய பாதிப்புகள் தினந்தோறும் உச்சம் பெற்று வரும் நிலையில் கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டு உள்ளன.

அதேநேரம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து இந்தியாவை தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. 

இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி சற்று அதிகரித்துள்ளது.

நேற்று 1,027 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் இந்த வைரஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 036 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13  லட்சத்து 65 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து