முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் மரியாதை

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 130-வது பிறந்த நாளான நேற்று ஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும் டாக்டர். அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கருக்கு சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.  

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் வியஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கர் தன் வாழ்க்கை முழுவதும் போராடினார். அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தை நம் வாழ்க்கையில் பயன்படுத்தி மாற்றம் அடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில்,  பாரத ரத்னா விருது பெற்ற அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்கு தலைவணங்குகிறேன். ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அவர் போராடியது ஒவ்வொரு தலைமுறையிக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பதிவில், அரசியலமைப்பின் சிற்பியாக பாபாசாகேப் அம்பேத்கரின் பங்களிப்புக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும். நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். பாபாசாகேப்பின் அதே கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பதிவில், நாட்டின் வளர்ச்சி பாதைக்காக பல கடினமான கேள்விகளை எழுப்பிய பாபாசாகிப் அம்பேத்கரை நாம் நினைவு கூருகிறோம் என பதிவிட்டுள்ளர்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது டுவிட்டர் பதிவில்,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பாளரும் சமூக நீதியை நிலைநாட்ட கொஞ்சமும் பயமும் தயக்கமும் காட்டாத அம்பேத்கரை நாம் நினைவு கூருகிறோம் என பதிவிடுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து