முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு நேற்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, 

எனது தந்தை டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கடந்த வாரம் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அவர் ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து