Idhayam Matrimony

அம்பேத்கர் பிறந்த தினம்: டுவிட்டரில் கமல் மரியாதை

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமூக வலைதளங்களிலும் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து