முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 2-ம் அலை கைமீறி செல்லவில்லை: சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி  ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வழக்கமான விசாரணை தொடங்கியபோது, வேறொரு  வழக்கில் ஆஜராகி இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம், கொரோனா 2-வது அலை  வேகமாக பரவி வருகிறது. நீதிமன்றங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுரைகள்  ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை  வழக்கறிஞர், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், குறிப்பாக  தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும்,  இந்த 2-ம் அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ  நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், தமிழகத்தில்  போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம்  சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை நீதிபதியைச் சந்தித்தார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியுடன் ஆலோசனை  நடத்திய பின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, 

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்றார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை நிறுவனங்கள், மக்கள் கூடும் இடங்களில் மேலும்  கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறினார்.  

மேலும் வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம். கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொணடவர்கள் கபசுர குடிநீர் அருந்தலாம் என்றும் தெரிவித்தார். 

 மூடப்பட்ட கொரோனா  சிகிச்சை மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தடுப்பூசி  செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைவாகவே  இருக்கும். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 19,422  படுக்கைளும், மாநில அளவில் 83,376 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து