முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பை இயற்கை பேரிடராக கருத வேண்டும்: மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா பாதிப்பை இயற்கை பேரிடராக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். 

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மகராஷ்டிரா அரசு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க விரும்புகிறது. வெள்ளம், மின்னல் தாக்குதல், திடீரென அதிக மழை போன்ற இயற்கை பேரிடர் பாதிக்கும் காலத்தில் மக்களுக்கு உதவி செய்வது போன்று தற்போது கொரோனா தொற்றால் பாதித்து வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை இயற்கை பேரிடர் என கருத வேண்டும் என்று மகராஷ்டிரா மாநில முதல்வர்  உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து