முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மிகுந்த பரபரப்பான சூழலில் மேற்கு வங்கத்தில் இன்று (சனிக்கிழமை) 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. இதில் கடந்த 10-ம் தேதி நடந்த 4-வது கட்ட வாக்குப்பதிவில் வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான், டார்ஜிலிங் மற்றும் ஜல்பாங்குரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் களத்தில் இருக்கும் 319 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 1.12 கோடிக்கும் அதிகமான வேட்பாளர்கள் நிர்ணயிக்கிறார்கள். 4-ம் கட்ட வாக்குப்பதிவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், இந்த தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேற்கு வங்காள அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுவதால் 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவில் பிரகாசிப்பதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பை தொடர்ந்து வருகின்றன. இதனால் தேர்தல்களத்தில் தொடர்ந்து அனல் பறக்கிறது.  அந்த வகையில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தலைநகர் கொல்கத்தாவில் பிரமாண்ட சாலை பேரணியை நடத்தினார். பெலகத்தா பகுதியில் இருந்து பவ்பஜார் வரையிலான 4 கி.மீ. தூரத்துக்கு சக்கர நாற்காலியில் இருந்தவாறே இந்த பேரணிக்கு அவர் தலைமையேற்று சென்றார். அவருடன் சமாஜ்வாடி எம்.பி.யும், நடிகையுமான ஜெயாபச்சன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களும் உடன் சென்றனர்.

இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் மம்தா பானர்ஜியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும் கூடி மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பேரணி முடித்தபின் உரையாற்றிய மம்தா பானர்ஜி, மக்களுக்கு வங்காள புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அத்துடன் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து