முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

திருப்பதி மக்களவை இடைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, காளஹஸ்தி, சத்யவேடு ஆகிய 3 சட்டசபை தொகுதிகளையும், நெல்லூர் மாவட்டத்தில் சர்வே பள்ளி, கூடூரு, வெங்கடகிரி, சூலூருபேட்டா ஆகிய 4 சட்டசபை தொகுதிகளையும் உள்ளடங்கிய திருப்பதி மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் நடைபெற்று வந்தது. 

இந்தப் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டாக்டர் குருமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பனபாகலட்சுமி களத்தில் உள்ளார். பா.ஜ.க. - ஜனசேனா கூட்டணி சார்பில் கர்நாடக முன்னாள் மாநில தலைமைச் செயலாளர் ரத்னா பிரபாவும் போட்டியிடுகிறார். இதனால் திருப்பதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.  கடந்த 3 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திருப்பதியில் முகாமிட்டு அனைத்து 7 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட பொது கூட்ட நிகழ்ச்சியில் அவர் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.  பா.ஜ.க. சார்பில் அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மாநிலங்களவை பா.ஜ.க. உறுப்பினர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உட்பட பலர் திருப்பதியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

திருப்பதி மக்களவை தொகுதி யில் அதிகமாக தமிழர்களின் வாக்குகள் இருப்பதால் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நடத்திய தேர்தல் பிரச்சாரம் பலரை வெகுவாக கவர்ந்தது. மேலும், ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன்கல்யாணும் தனது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிசார்பில் துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தனர். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து