முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தஞ்சை பெரிய கோவில் மூடல்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம், செஞ்சிக் கோட்டை, தஞ்சை பெரிய கோவில் நினைவுச்சின்னங்கள் மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய -மாநில அரசுகள் பல்வேறு தடைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் செயல்படும் மாமல்லபுரம், செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட பழங்கால நினைவுச்சின்னங்கள் அனைத்தும் மே 15-ந்தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த தகவலை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார். 

இந்நிலையில், செஞ்சிக் கோட்டை நுழைவுவாயிலைத் தொல்லியல் துறையினர் நேற்று அடைத்தனர். இதனால் செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் தஞ்சை பெரிய கோவில் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரம், கோவில் ஆகம விதிப்படி, தினமும் 4 கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் அறிவித்தனர். 

இதேபோல், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐராவதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து