முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ வெளியிட்ட 2021-ம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடப்பு 2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. அதில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவர் மட்டும் ஏ+ கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சம்பளத் தொகை ஆண்டுக்கு 7 கோடி ரூபாயாகும்.

பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலானது 2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கானது. பி.சி.சி.ஐ-ன் ஒப்பந்த பட்டியல் என்பது 4 ஊதிய அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ரூ.7 கோடியும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக பெறுவார்கள்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடு பிரிவுக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒரு நிலை சரிந்து பி கிரேடில் இடம்பெற்றுள்ளார். அதே போல ஷர்துல் தாக்கூர் ஒரு நிலை முன்னேறி பி கிரேடுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏ கிரேடில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ்வ், 2 இடங்கள் சரிந்து சி கிரேடுக்கு வந்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தப் பட்டியலில் இருந்து மனிஷ் பாண்டே மற்றும், கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில், அக்ஸர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021ம் ஆண்டுக்கான பி.சி.சி.ஐ ஒப்பந்தப் பட்டியல்:

கிரேடு ஏ+ (ரு.7 கோடி)

1) விராட் கோலி.

2) ரோகித் சர்மா.

3) ஜஸ்பிரித் பும்ரா.

கிரேடு ஏ (ரு.5 கோடி)

1) ஆர்.அஸ்வின்.

2) ரவீந்திர ஜடேஜா.

3) சட்டேஸ்வர் புஜாரா.

4) அஜிங்கியா ரகானே.

5) ஷிகர் தவான்.

6) கே.எல்.ராகுல்.

7) முகமது ஷமி.

8) இஷாந்த் சர்மா.

9) ரிஷப் பந்த்.

10) ஹர்திக் பாண்டியா.

கிரேடு பி (ரு.3 கோடி)

1) விர்திமன் சாஹா.

2) உமேஷ் யாதவ்.

3) புவனேஸ்வர் குமார்.

4) ஷர்துல் தாக்கூர்.

5) மயங்க் அகர்வால்.

கிரேடு சி (ரு.1 கோடி)

1) குல்தீப் யாதவ்.

2) நவ்தீப் சைனி.

3) தீபக் சாஹர். 

4) சுப்மன் கில்.

5) ஹனுமா விஹாரி.

6) அக்ஸர் பட்டேல்.

7) ஸ்ரேயாஸ் ஐயர்.

8) வாஷிங்டன் சுந்தர்.

9) யுவேந்திர சாஹல்.

10) முகமது சிராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து