முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடது கை விரலில் காயம்: பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை

சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் பென் ஸ்டோக்ஸ். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின்போது, பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். அப்போது அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், காயம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். ஏற்கெனவே ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிவிட்ட பென் ஸ்டோக்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருப்பார். அதனால் அவர் எந்தப் போட்டியிலும் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில், அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் காயத்திலிருந்து மீண்டு ஐ.பி.எல் தொடரின் கடைசிக் கட்ட ஆட்டங்களில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து