முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஒட்டாவா : கனடா நாட்டின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ, இந்தியா நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 140 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் சிலர் போராடி வருகின்றனர். மேலும், சில வெளிநாட்டு பிரபலங்களும் இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கனடா மாகாணமான சஸ்காட்செவனின் முதல்வர் ஸ்காட் மோ, இந்தியாவின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தோ - கனடா சேம்பர் ஆப் காமர்ஸ் (ஐ.சி.சி.சி) சார்பில் நடைபெற்ற வெபினாரில் அவர் பங்கேற்று பேசியதாவது:-

 2012-ம் ஆண்டில் கனடிய கோதுமை வாரியம் ஒழிக்கப்பட்ட போது, இந்தியாவில் தற்போது நிலவுவது போன்ற எதிர்ப்பு அப்போது கனடாவிலும் நிலவியது. இந்தியாவில் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு முறையை போலவே, அப்போது மேற்கு கனடாவில் சஸ்காட்செவன் உட்பட பல மாகாணங்களில் இதுபோன்ற குழுக்கள் பொருட்களின் மீது ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது.

ஆரம்ப நிச்சயமற்ற தன்மை கொண்ட சீர்திருத்தம், பின்னர் இந்த மாகாணங்களில், குறிப்பாக சஸ்காட்செவனில் விவசாயத் துறையின் புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுத்தது. இது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொடர்ச்சியான மற்றும் அதிவேக உயர்வுக்கு வழிவகுத்தது.

இதனால் தற்போது சஸ்காட்செவனின் தானிய ஏற்றுமதி கிட்டத்தட்ட 17 பில்லியனைத் தொட்டு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. வளர்ச்சி மாற்றத்துடன் மட்டுமே வருகிறது. மாற்றம் எப்போதும் எளிதானது அல்ல. வளர்ச்சி, சிறந்த வாய்ப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து