முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 472 அதிகரிப்பு

புதன்கிழமை, 21 ஏப்ரல் 2021      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 472 அதிகரித்து ரூ. 36,048-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் தங்கம் விலை சற்று குறைந்ததைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 59 உயர்ந்து ரூ. 4,506-க்கு விற்பனையானது. அதன் படி, சவரனுக்கு ரூ. 472 உயர்ந்து ரூ.36,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்தது. அந்த சமயம் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது கணிசமாக குறைந்து வந்த தங்கம் விலை, ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தங்கம் விலை மீண்டும் பழைய படியே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து