முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: 6-ம் இடத்துக்கு முன்னேறி ரிஷப்பந்த் புதிய சாதனை

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. 

மிடில் ஆர்டரில் அசத்தல்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து இந்திய அணியை காப்பாற்றினார் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளார்.

கோலிக்கு 5-ம் இடம்

இந்நிலையில் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் பந்த். தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 5-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில் ரிஷப் பந்த் 6-ம் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவின் ரோஹித் சர்மாவும் 6-ம் இடத்தில் உள்ள மூன்று வீரர்களில் ஒருவராக உள்ளார். 6-ம் இடத்தில் உள்ள மற்றொரு வீரர், நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து