முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்யின் படப்பிடிப்பு பாதிப்பு

புதன்கிழமை, 5 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

விஜய்யின் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்படுகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.

படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. அதனால், விஜய் 65 என அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. சண்டைக்காட்சி, பாடல் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடர திட்டமிட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல். அதன் காரணமாக  சென்னையில் ஷாப்பிங் மால் போன்று பிரமாண்ட அரங்கு அமைப்பது என முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து