முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா செல்லும் ரஜினி.

புதன்கிழமை, 5 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் டப்பிங் பேசுகிறார். அந்த வேலை முடிந்த பின், ஜுனில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து