முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாட்டில் கொரோனா சூழல் பற்றி கட்சியின் அனைத்து எம்.பி.க்களுடனும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களுடனும் நாட்டில் கொரோனா சூழல் பற்றி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.  இதில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து