முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

வியாழக்கிழமை, 6 மே 2021      சினிமா
Image Unavailable

நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

எம்.ஜி.ஆருக்கு நன்கு அறிமுகமானவரும், கலை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், தமிழ் திரையுலகின் பிரபல குணசித்திர நடிகருமான பாண்டு, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். பழகுவதற்கு இனிய பண்பாளரான அன்பு சகோதரர் நடிகர் பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை துறையினருக்கும் இந்த துயரத்தை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து