முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவி குறித்து வெளிப்படைத் தன்மை தேவை: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்த்து, உலக நாடுகள் வழங்கும் உதவிகள் குறித்து மத்திய அரசு வெளிப்படைத் தன்மையைப் பராமரிப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இதைப் பார்க்கும் உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவாக்கிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பி.பி.இ கிட், நிதியுதவி என ஏராளமானவற்றை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன. வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு டுவிட்டரில் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், 

இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன். என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது?, எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன?, ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு டுவீட்டில் ராகுல் காந்தி கூறுகையில், கொரோனா வைரஸைக் கையாள்வதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், மக்களுக்கு வேலை வழங்குவதிலும் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது எனத் தெரிவித்தார். மேலும், இந்திய பொருளாதாரக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் மாதம் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா இழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அந்த டுவீட்டில், தடுப்பூசியும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. கொரோனா வைரஸ் கொடுமையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்தது என்று ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து