முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்யாவில் 78 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய குழந்தையின் கல்லறை

வியாழக்கிழமை, 6 மே 2021      உலகம்
Image Unavailable

78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் கல்லறை, ஆப்ரிக்கவின் மிகப் பழைமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, கென்யா நாட்டின் ஒரு குகையில், மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் கல்லறை மற்றும் எச்சங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்குழந்தையின் தலையை, ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல அடக்கம் செய்திருக்கிறார்கள் என, நேச்சர் பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்கள்.

மீதமிருக்கும் எலும்புத் துண்டுகளை பத்திரமாக பாதுகாக்கும் நோக்கில், சர்வதேச அகழ்வாராய்ச்சியாளர்கள் அணி, அக்கல்லறையை பாதுகாப்பாக பிளாஸ்டரில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்களால் அக்குழந்தையின் பற்களை ஆராய முடிந்துள்ளது. அதன் மூலம் 2 அல்லது 3 வயதுக்கு இடைப்பட்ட மனித குழந்தை என உறுதி செய்ய முடிந்தது. பரிசோதனையில் அக்குழந்தையின் உடல் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவைப் போல கிடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அக்குழந்தைக்கு ‘மடொடொ’ என, விஞ்ஞானிகள் பெயரிட்டு இருக்கிறார்கள். மடொடொ என்றால் ஸ்வாஹிலி மொழியில் ‘அந்த குழந்தை’ என்று பொருள். அந்த கல்லறையை ஆய்வுசெய்த ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர், ஒரு நிழலை அகழ்வாய்வது போல இருந்தது என்று கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து