முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் - ஐதராபாத் போட்டியின் போது டெல்லி மைதானத்தில் நுழைந்த சூதாட்ட புக்கிகள் இருவர் கைது

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல் போட்டியின் போது டெல்லி மைதானத்தில் நுழைந்த கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் ஆகிய சூதாட்ட புக்கிகள் இருவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல் 2021 போட்டிகள் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடும் போது நடந்து கொண்டிருந்தது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு போட்டியில் அனுமதியின்றி மைதானத்துக்குள் சூதாட்ட புக்கிகள் எப்படி நுழைய முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனுமதியில்லாமல்...

அந்த 2 புக்கிகளையும் இப்போது கைது செய்துள்ளனர். ஐ.பி.எல் 2021 தொடரில் மே-2ம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 220 ரன்களை குவித்தது, பதிலுக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 165/8 என்று முடங்கியது. இந்தப் போட்டியின் போது கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் ஆகிய சூதாட்ட புக்கிகள் அனுமதியில்லாமல் டெல்லி மைதானத்துக்குள் நுழைந்தனர். விஐபிக்கள் அமரும் பகுதியில் சுற்றித்திரிந்தனர்.

வழக்குப் பதிவு 

அதுவும் கொரோனா காலக்கட்டத்தில் வீரர்கள் பயோ-பபுளில் இருக்கும் போது முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த இவர்களை டெல்லி போலீஸ் அதிகாரி விசாரித்தார். இருவரும் விசாரிக்கப்பட்டதில் முன்னுக்குப் பின் முரணாக உளறத்தொடங்கினர், காவல்துறை உதவி ஆய்வாளருக்கு சந்தேகம் எழ இருவரும் ஓடத்தொடங்கினர். போலீசார் இவர்களை விரட்டிப் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசிடம் புகார்...

இது தொடர்பாக பி.சி.சி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஷபிர் ஹுசைன் கூறும்போது, எங்கள் குழுவின் அதிகாரி, ஒரு நபரைப் பிடித்து விசாரித்த போது அவர் இரு செல்போன்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். போட்டி குறித்த விவரங்களை உள்தகவல்களை இந்த நபர் புக்கிகளிடம் பகிர்ந்திருக்கலாம், இது தொடர்பாக டெல்லி போலீசிடம் புகார் செய்தோம், தாமதிக்காமல் இரு புக்கிகளையும் போலீசார் பிடித்தது பாராட்டத்தக்கது, என்றார்.

தீவிர விசாரணை 

இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் போலி அடையாள அட்டையைக் காட்டி அருண் ஜேட்லி ஸ்டேடியத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் போட்டியை இருவரும் ஃபிக்ஸ் செய்ய வந்துள்ளதாகத் தெரிகிறது. பெரிய சூதாட்ட கும்பலைச் சேர்ந்தவர்களாக இருவரும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, விசாரணை இன்னும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து