முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டிகள் ரத்து: காப்பீடு தொகையை பெறுவதில் புதிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள பி.சி.சி.ஐ

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் போட்டிகள் ரத்தால் காப்பீடு இழப்பீட்டுத் தொகைப் பெற முடியாமல் பி.சி.சி.ஐ புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

தற்காலிகமாக ரத்து 

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாத சூழலும் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது

பாதியிலேயே விலகல்

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. எனினும், கொரோனா அச்சம் காரணமாக அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினர்.

தற்காலிகமாக ரத்து 

மேலும், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஐ.பி.எல் போட்டியை நடத்துவதால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் ஸ்பான்சர்ஷிப், விளம்பர ஒப்பந்தம் ஆகியவை மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.

கொரோனாவுக்கு விலக்கு

ஐ.பி.எல் போட்டிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அளவு 3,500 கோடி ரூபாய் ஆகும். எனினும், ஐ.பி.எல் போட்டிக்கு ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ள காப்பீட்டில் கொரோனாவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, ஒத்தி வைக்கப்பட்டாலோ இழப்பீடு பெற முடியாது.

காப்பீடு மூலம் பெற...

தற்போது, எடுக்கப்பட்டுள்ள காப்பீட்டின்படி நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாமல் மட்டுமே இழப்பீடு பெற முடியும். இதேபோல், கொரோனா காரணமாக போட்டியில் இருந்து வீரர்கள் விலகினாலும் அதற்கான இழப்பீட்டை காப்பீடு மூலம் பெற முடியாது. எனெனில் அவர்கள் கொரோனா காரணமாகவே விலகுகின்றனர் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து