முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரும் தோல்வி: மத்திய அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 10 மே 2021      இந்தியா
Image Unavailable

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது என்று சோனியாகாந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள், கொரோனா பாதிப்பு, தடுப்பூசி உள்ளிட்டவை பற்றி சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.  கூட்டத்தில் சோனியா காந்தி  பேசியதாவது, 

மேற்கு வங்காளம், கேரளா, அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  நமக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளா, அசாமில் பதவியில் இருக்கும் அரசாங்கங்களை அகற்ற காங்கிரஸ் ஏன் தவறி விட்டது மற்றும் மேற்கு வங்கத்தில் முழுமையான காலியாக இருந்தது என்பதை நாம் நேர்மையாக புரிந்து கொள்ள வேண்டும். 

மோடி அரசு தனது பொறுப்பை தட்டி கழித்து தடுப்பூசி போடுவதை மாநிலங்களுக்கு விட்டு விட்டார்.   கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டும் என்றே நிராகரித்தது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடுவதற்கான செலவை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக மத்திய அரசை  சோனியா காந்தி சாடினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து